பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
03:04
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (ஏப்., 18ல்) நடக்கிறது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமானவ சுவாமி கோவிலில் சித்திரை தேர்விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும், மட்டுவார் குழலம்மை சமேதராக, சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். கடந்த 14ல், சிவபெருமான் தாயாக வந்து, ரத்னாவதி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைபம், 15ல், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று (ஏப்., 18ல்) நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.