புதுச்சத்திரம் சக்தி முருகன் கோவிலில் காவடி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2019 03:04
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம் சக்திமுருகன் கோவிலில் வரும் 19 ம் தேதி காவடி உற்சவம் நடக்கிறது.விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
சிறப்பு விழாவான காவடி உற்சவம் நாளை 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 11.00 மணிக்கு ஓடை குளக்கரையிலிருந்து காவடி புறப்பாடு செய்து காவடி உற்சவம் நடக்கிறது.அதேபோல் பெரியப்பட்டு பாலமுருகன் கோவிலில் 23 வது ஆண்டு காவடி உற்சவம் நாளை 19ம் தேதி நடக்கிறது. விழா நேற்று (ஏப்., 17ல்) காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு காவடி மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது.