பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
03:04
கடலூர்: கடலூர் பழைய வண்டிப்பாளையம் விநாயகர் கோவிலில், வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கடலூர், திருப்பாதிரிப்புலியூர் கரையேறவிட்ட குப்பம் என்கிற பழைய வண்டிப்பாளையத்தில் உள்ள விநாயகர், பாலமுருகன், வீரமாகாளி, கிருஷ்ணர், திரவுபதியம்மன், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர், முத்தாலு ரஜபுத்திரர் நவக்கிரகங்கள்
மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூன்று நிலை கோபுரம், கொடி மரத்திற்கு, வரும் 22ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை சச்சிதானந்தம் அய்யர், கேதார தீட்சிதர், ஜெயபால சுப்ரமண்ய குருக்கள், கோவில் பூசாரி முருகன் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.