மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், ஆடுதுறையிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருநீலக்குடி இங்கு அம்பிகையே சிவலிங்கத்துக்கு எண்ணெய்க்காப்பு செய்வதாக நம்பிக்கை. இங்குள்ள சிவலிங்கத்தின் மீது எவவளவு நல்லெண்ணெய் விட்டாலும், அது முழுவதும் சிவலிங்கத்துக்குள்ளே ஊறி விடுகிறதாம். இந்தக் கோயிலில் அம்பிகை சன்னிதியில் எண்ணெய் வைத்து வழிபட்ட பின்னரே, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்கின்றனர்.