திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. கலி தீர்த்த அய்யனார் கோயில். இக்கோயிலில் ஏராளமான குழந்தை உருவச் சிலைகள் காணப்படுகின்றன. குழந்தைப் பேறு வேண்டி இக்கோயில் அய்யனாரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியவுடன் இதுபோன்ற குழந்தை உருவச்சிலைகளை வைத்து, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.