நெல்லை -தென்காசி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழப்பாவூர். இங்கு 16 கரங்களுடன், பிரகலாதவரதராக மேற்கு நோக்கி காட்சி தருகிறார் நரசிம்மர். இவரின் 6 கரங்கள் இரண்யனின் வயிற்றிலும், மற்றவை ஆயுதங்களுடனும் திகழ்கின்றன. கீழப்பாவூரை "பாண்டி நாட்டு அகோபிலம் என்கிறார்கள்.