திருநெல்வேலியிலிருந்து 59 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லியம்மன் சமேதராக கோயில் கொண்டிருக்கிறார், பூவனநாதர். இக்கோயிலைக் கட்டிய செண்பக மன்னனுக்கும் இங்கே சன்னிதி உள்ளது. அம்பாளுக்கு பூஜை நடந்து முடிந்த பிறகு, இங்கு பூஜை நடக்கிறது. திருப்பெருந்துறையில் மணிவாசருக்கு அடுத்து ஒரு தனி மனிதனுக்கு பூஜை நடப்பது இங்கு மட்டுமே.