திருவாடானை : திருவாடானையில் உள்ள பஜனை மடத்தில் ராமநவமியை முன்னிட்டு நேற்று ஸ்ரீராமர்-சீதா திருக்கல்யாணம் நடந்தது.ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோரின் திருஉருவ படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுவீதி உலாவும், இரவில் பஜன் ஆஞ்சநேய திவ்ய நாம சொற்பொழிவும் நடந்தது. சிவாச்சாரியார் சந்திரசேகர குருக்கள் தலைமையில் தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.