முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், அமைந்துள்ள அலர்மேல் மங்கை சமேத சீனிவாசப் பெருமாளுக்கு, பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் 24ம் தேதி புருஷசுக்த ஹோமம், திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு சூரியபிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் காலை ஹயக்ரீவ ஹோமம், திருமஞ்சனம், சஷேவாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை ஸ்ரீசுக்த, லஷ்மி ஹோமம், திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு கருடசேவை மாட வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 29ம் தேதி இரவு 8:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், 1ம் தேதி காலை 9:15 மணிக்கு தேரோட்டமும், மாலை 6:00 மணிக்கு கோபுர வாயிலில் தீர்த்தவாரி நடக்கிறது.