காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானிசுப்பராயன் சுவாமி தரிசனம் செய்தார்.நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானிசுப்பராயன் வருகை தந்தார். அவரை, கலெக்டர் விக்ராந்தராஜா சால்வை அணிவித்து வரவேற்றார்.பின்னர், நீதிபதி பவானிசுப்பராயன் தர்பாரண்யேஸ்வரர், முருகன், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து சனீஸ்வரர் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் தரிசனம் செய்தார். முன்னதாக எள் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தார்.நீதிபதியுடன் கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், எஸ்.பி., வீரவல்லபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.