குளித்தலை: முத்து பூபால சமுத்திரம் மாரியம்மன் கோவில், மூலமந்திர சண்டி ஹோமத்தையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. குளித்தலை முத்துபூபால சமுத்திரம் மாரியம்மன் கோவிலில் வரும், 5ல், திருவிழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, கோ பூஜை, சண்டி பூஜை நடந்தது. இரவு அம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.