பதிவு செய்த நாள்
29
ஏப்
2019
03:04
உடுமலை:உடுமலை அருகே மானுப்பட்டி குண்டத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடக்கிறது.
கோவிலில், கடந்த 26ம்தேதி விநாயகர் பொங்கல் வழிபாட்டுடன் திருவிழா துவங்கியது. அன்று இரவு, கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்றுமுன்தினம், (ஏப்., 27ல்)மாரியம்மனுக்கு, ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
நேற்று (ஏப்., 28ல்), காலை, 7:00 மணிக்கு அம்பாளுக்கு, மாங்கல்யம் வழங்கும் சீர் நிகழ்ச்சியும், நடந்தது.இன்று (ஏப்., 29ல்), மாலை, 4:00 மணிக்கு அன்னபூரணி அலங்காரம் மற்றும் இரவு, 7:00 மணிக்கு விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (ஏப்., 30ல்), மாலை, 4:00 மணிக்கு பூ குண்டம் வளர்த்தல் மற்றும் கும்பஸ்தாபனம் நடக்கிறது.
வரும் மே, 1ம்தேதி, அதிகாலையில் பக்தர்கள் பூக்குண்டம் இறங்குகின்றனர்.தொடர்ந்து, கரகப்பானை சீர் எடுத்துவருதல், அம்பாளுக்கு சீர் கொண்டு வருதல் மற்றும் காலை, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவில், மாவிளக்கு மற்றும் பூவோடு நிகழ்ச்சியும் நடக்கிறது. மே, 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், 3ம்தேதி மதியம், மகா அபிஷேக பூஜையும் நடக்கிறது.