பிரதோஷத்தில் சொல்ல வேண்டிய வழிபாடு இது தான். ”ஆலகால விஷத்தைக் கூட அமுதமாகக் கருதி சாப்பிட்டவரே! உயிர்களைக் காத்த பிரதோஷ மூர்த்தியே! நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு நடுவில் மாலை நேரத்தில் நடனம் ஆடுபவரே! முப்பத்து முக்கோடி தேவர்களும் உன்னை வழிபட இங்கு வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து நானும் உன்னை வணங்குகிறேன்” என்று சொல்லி சிவன் சன்னதியை வலம் வர வேண்டும். இதன் மூலம் நிம்மதி கிடைக்கும். கிரக தோஷம் விலகி தொழில், திருமண யோகம் உண்டாகும்.