Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்றி தெரிவிக்கும் பூஜை பிரசாதம் இது பிரமாதம்: களி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிதம்பரம் நடராஜர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
05:04

பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம் (நீர் – திருவானைக்காவல். நிலம் – காஞ்சிபுரம். அக்னி – திருவண்ணாமலை. காற்று – காளஹஸ்தி). சிதம்பரம் நடராஜரை தரிசித்தாலே முக்தி. இக்கோயிலின் நான்கு திசைகளிலும் பிரமாண்டமான ராஜகோபுரங்கள் உள்ளன. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பூலோக கைலாயம் என சிறப்பு பெயரும் உண்டு.  ’மதுரை’ என்றாலே மீனாட்சி நினைவுக்கு வருவது போல சிதம்பரம் என்றாலே நடராஜர் தான். இவரே பிரதான தெய்வம். சிதம்பரத்தில் பூஜை செய்பவர்கள் தில்லைவாழ் அந்தணர்கள் என்னும் தீட்சிதர்கள்.

மனித அறிவுக்கு எட்டாத விஷயங்களை ’அதென்ன... சிதம்பர ரகசியமா?’ என்று கேட்கும் வழக்கம் உண்டு. அதற்கான விளக்கம் இதோ! இங்கு நடராஜரின் வலது பக்கம் சிறு வாசல் காணப்படும். நீலநிற துணியால் திரையிட்டு மூடியிருப்பர்.  தினமும் இரவில் இங்கு சிறப்பு பூஜை நடக்கும். அறியாமையில் இருக்கும் நம்மை, ஞானத்திற்கு அழைக்கும் வழிபாடாக இது உள்ளது. பூஜையின் போது திரையை அகற்றி தீபாராதனை காட்டுவர். அதில் நவரத்தினம் பதித்த தங்கத்தால் ஆன, வில்வ மாலை சுவரில் தொங்கும். எங்கும் நிறைந்த கடவுள் இங்கிருக்கிறார் எப்படி தெரியுமா? வெற்று வெளியாக அதாவது ஆகாய வடிவத்தில் இருக்கிறார். இந்த தரிசனமே ’சிதம்பர ரகசியம்’ எனப்படுகிறது. சித் (அறிவு), அம்பரம் (வெட்டவெளி) என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கை சிதம்பரம்.

கடவுள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. அகக் கண்களால் அவரைக் காண வேண்டும் என்பதே சிதம்பர ரகசியம். அகக்கண்ணில் கடவுள் தெரிந்தால் அறியாமை நீங்கும். மாயை மறையும். ஞானம் பிறக்கும்.  சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டு முழுவதும் விழா நடந்தாலும் முக்கியமானது ஆருத்ரா தரிசனம். ’ஆருத்ரா’ என்பது திருவாதிரை நட்சத்திரத்தைக் குறிக்கும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று ’ஆருத்ரா விழா’ கொண்டாடுவர்.   திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரியவர் சிவன். அவருக்கு ’ஆதிரையான்’ என்றும் பெயருண்டு. திருவாதிரை விழாவில் 10ம் நாளில் ஆருத்ரா தரிசனம். அதற்காக தினமும் யாகசாலையில் காலையும், மாலையும் ஹோமம் நடக்கும். உற்ஸவர்களான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர், சுப்பிரமண்யர், சண்டிகேஸ்வரர் பவனி வருவர்.

ஒன்பதாம் நாளில் தேர் திருவிழாவில் மூலவர் நடராஜரே எழுந்தருள்வார். அப்போது சுவாமியின் பின்புறத் தோற்றத்தை தரிசிக்கலாம்.  பக்தர்கள் முன்னும், பின்னுமாக  சென்று தரிசிப்பது காண்போரை பரவசப்படுத்தும். வேத கோஷம் விண்ணைப் பிளக்கும். பன்னிரு திருமுறைகள் ஓதப்படும். நாதஸ்வரமும், தவில் ஓசையும் திமிலோகப்படும். சிவனடியார்கள் சிவ நாமங்களை சொல்லி வடம் பிடிக்க, தேர் புறப்பாடு நடக்கும்.  தேரின் நடுவில் ஊஞ்சலில் நடராஜர் இருப்பார். சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்கப்படும்.  இவரே நடராஜருக்கு  திருவாதிரை களியை பிரசாதமாக படைத்தார். இதனால் வீடுகளில் சுவாமிக்கு களி படைத்து பிரசாதமாக சாப்பிடுவர். பெரியாழ்வார் மதுரையில் கூடலழகருக்கு பல்லாண்டு பாடியது போல சிதம்பரத்தில் சேந்தனார் திருப்பல்லாண்டு பாடல் பாடினார். இதைக் கேட்ட பின்னரே நடராஜரின் தேர் நகரும்.

ஒரு ஆண்டில் சிதம்பரம் நடராஜருக்கு  ஆறு முறை அபிஷேகம். இதில் திதி அடிப்படையில் மூன்று; நட்சத்திர அடிப்படையில் மூன்று.

* சித்திரை – திருவோணம்; ஆனி – உத்திரம்; மார்கழி – திருவாதிரை.
* ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதி.

தெய்வீகம், தேசியத்தை போற்றும் விதமாக சிதம்பரம் தீட்சிதர்கள் இந்திய குடியரசு, சுதந்திர தினத்தன்று 152 அடி உயர கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றி பாரத தாயை வணங்குவர்.

பாரத தேசம் நலம் பெற வேண்டி நடராஜரின் திருவடிகளைச் சரணடைவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar