பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
12:04
ஈரோடு: மகிமாலீஸ்வரர் கோவில், சித்திரை தேரோட்ட விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட, ஈரோடு டி.வி.எஸ்., வீதியில் உள்ள, மகிமாலீஸ்வரர் கோவிலில், நடப்பாண்டு சித்திரை திருவிழா, கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து சிறப்பு கட்டமுது திருநாள், கயிலை வாகன காட்சி, அப்பர் கயிலை காட்சி, திருக்கல்யாணம் மற்றும் இந்திர விமானத்தில் திருவீதியுலா நடந்தது. நேற்று (ஏப்., 29ல்) அப்பர், விநாயகர், சந்திரசேகரர் புறப்பாடு, பல்லவன் சரணாகதி நிகழ்ச்சியை தொடர்ந்து, முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.
முன்னதாக விழா மண்டபத்தில், மங்களாம்பிகை உடனமர் மகிமாலீஸ்வரர் சுவாமி மற்றும் கிரியா சக்தி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு தேரோட் டம் தொடங்கியது. கோவில் வளாகத்தில் முன் அலங்கரித்து நிறுத்தியிருந்த தேரை, ஆண்கள், பெண்கள், சிவனடியார்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
டி.வி.எஸ்.வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக சென்று, மணிக்கூண்டு பகுதியில் நின்றது. மீண்டும் புறப்பட்டு, கோவிலிலில் நிலை நிறுத்தப்பட்டது. மாலையில் ஒளி வழிபாடு, அப்பருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.