தோழர்கள் சிலர்.”ஜோதிடர்கள் சிலர் சொல்வது அப்படியே நடக்கிறதே! நம்பலாமா?” என நாயகத்திடம் கேட்டனர்.
”மனிதனைப் போல பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைகோட்பாட்டை கடைபிடிக்கும் ’ஜின்கள்’ மூலம் அறிந்த விஷயங்களுடன் பொய் கலந்து பலன் சொல்கின்றனர். அதை உண்மை என்று நம்புபவன் குர்ஆனை நிராகரித்தவன் ஆவான். குறி பார்க்க எந்த பிராணியையும் யாரும் பழக்கப்படுத்தக் கூடாது. குறி, ஜாதகம், ஜோதிடத்தை உண்மை என நம்பினால், ஒருவருடைய 40 நாள் தொழுகை இறைவனால் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை” என விளக்கம் அளித்தார்.