பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
03:04
* ஏப்.27, சித்திரை 14: திருவோண விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் சபாபதி அபிஷேகம், செப்பறை நடராஜர் சங்காபிஷேகம், சென்னை சென்ன கேசவப்பெருமாள் தங்கப்பல்லக்கு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கு, சாத்தூர் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* ஏப்.28, சித்திரை 15: சென்னை சென்னகேசவப் பெருமாள் பூப்பல்லக்கு, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சன சேவை, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சப்தாவர்ணம், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு, கரிநாள்.
* ஏப்.29, சித்திரை 16: முகூர்த்த நாள், திருநாவுக்கரசர் குருபூஜை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அப்பர் திருவிளையாடல், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோயிலில் நான்கு கருடசேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்ஸவம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
* ஏப்.30, சித்திரை 17: ஏகாதசி விரதம், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம், சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், மதுரை திருமோகூர் காளமேகப்பெருமாள், செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி.
* மே 1, சித்திரை 18: நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் தருமபதி திருக்காட்சி, திருச்செங்காட்டங்குடி சிவன் புஷ்ப பல்லக்கு, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம், அகோபிலமடம் 32வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
* மே 2, சித்திரை 19: முகூர்த்த நாள், பிரதோஷம், மதுரை வீரராகவப்பெருமாள் உற்ஸவம், வீரபாண்டி கவுமாரியம்மன், செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி.
* மே 3, சித்திரை 20: மாத சிவராத்திரி விரதம், சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தேர், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.