வடை வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் வரும் வழியில் குரங்குகள் தொல்லை செய்தன. கூடையைத் தள்ளி விட்டு வடைகளை தினமும் எடுத்து சென்றன. கீழே விழுந்த வடைகளில் உள்ள மணலை ஊதிவிட்டு விற்பனை செய்தார் அவர். இதையறியாமல் வடை சாப்பிட்ட மக்கள், ’மணலாக இருக்கிறதே’ என குறை கூறினர். நாளடைவில் விற்பனை குறைந்தது. குரங்கைத் தடுக்க, கூடைக்குள் இரும்புத்தகட்டை லாவகமாக வைத்து அதன் மீது தீக்கங்குகளை பரப்பினார். அதைத் தலையில் சுமந்தபடி வந்தார். குரங்குகளும் மரத்தில் இருந்து பாய்ந்து கங்குகளுக்குள் கையை விட்டன. அவ்வளவுதான்! ஓடின. மறுநாள் வியாபாரி வந்தபோது குரங்குகள் தலைதெறிக்க ஓடின. ஒருவழியாக மக்களிடம் நடந்ததைச் சொல்லி வியாபாரத்தை சீராக்கினார். மனிதர்களின் மனசும் குரங்கு தான். பாவங்களில் ஈடுபட்டால் அதை விடமுடியாத பழக்கமாகி விடும். முடிவில் அக்கினிக் கடலுக்குள் நம்மை இழுத்துச் செல்லும். அப்படி செல்லாதபடி முதலிலேயே மனதைக் கட்டுப்படுத்தி பாவச் செயல்களில் ஈடுபடாதீர்கள்.