தில்லை எனப்படும் சிதம்பரம் தலத்தில் விளங்கும், ‘சிகண்டி பூர்ணம்’ என்ற கோயில் மணியே உலகிலேயே சிறந்த கோயில் மணியாகும். இதற்கு இணையான மணி உலகில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் விளங்கும் இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால் மட்டுமே உணர முடியும், 59 நொடிகள் ஒலிக்கும் இந்த மணி சத்தத்தைக் கேட்டால் ஆயுளில் 12 விநாடிகள் அதிகரிக்கும். வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் ஒருவரை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்திவிடும். தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த. ‘சிகண்டி பூரண ’ மணி ஓசையைத் தொடர்ந்து கேட்பது நலம்.