கோயிலில் இறைவனுக்கு வெண் சாமரம் வீசும் நடைமுறை உண்டு. இது இறைவனுக்கு வியர்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. வெண்சாமரம் கவரி மான்களின் ரோமங்களால் ஆனது. இதற்கு வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. இறைவனின் திருமேனியில் இருந்து ஒளிக்கதிர்களாகவும் ஒலி அதிர்வுகளாகவும் வெளிவரும் வேத மந்திரங்களையும் பிஜாட்சரங்களையும் எட்டு திசைகளிலும் பரவச் செய்வதற்காகவே வெண் சாமரம் வீசப்படுகிறது.