விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் - ஆத்தூர் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பொன் பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயில். இத்தலத்தில் ஐந்தரை அடி உயரத்துடன் ஷோடச லிங்கமாக (16 முகம்) காந்தத் தன்மை கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட லிங்கத் திருமேனி விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு லிங்கம் மட்டுமன்றி விஷ்ணு, பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் நீலநிறமாக மாறி வழிந்தோடுவது அதிசயம்!