கம்பம் கவுமாரியம்மன் கோயில் விழா வீதி தோறும் கூழ் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2019 03:05
கம்பம்: கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு வீதி கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 17ல் கொடியேற்றத்துடன் துவங் கியது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தி வருகின்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.
நேற்று (மே., 1ல்) காலை கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்க ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கில் பெண்கள் திரண்டதால், இடநெருக்கடி ஏற்பட்டது. பல வீதிகளிலிருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து முல்லையாற்றில் கரைத்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு வீதி கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய பஸ்ஸ்டாண்ட் ரோடு மூடப்பட்டு, குமுளி மற்றும் தேனி செல்லும் பஸ்கள், வ.உ.சி. திடல் மற்றும் கிராமச்சாவடி வீதி வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கம்பம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் கம்பத்தில் குவிந்து வருகின்றனர்.