சேவல் மூலமாக வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை முருகன் நமக்கு உணர்த்துகிறார். இந்த வாழ்வு நிலையானது என்ற அறியாமை துõக்கத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், இந்த உலகம் வாடகை வீடு என்னும் விழிப்பு நிலை பெற வேண்டும் என்பதே சேவல் கூறும் தத்துவம். திருச்செந்துõர் கடற்கரையில் முருகப்பெருமானும், சூரபத்மனும் உக்கிரமாகப் போரிட்டனர். அனைத்து ஆயுதங்களையும் இழந்து விட்டாலும், மனம் தளராத சூரன், எப்படியும் முருகனிடம் இருந்து தப்பிவிடலாம் என்று கணக்கு போட்டான். தன் மாயசக்தியினால் மாமரமாக மாறி நின்றான்.முருகன் தன் வேலினால் மரத்தை இரண்டு கூறாகப் பிளந்தார். ஒரு புறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.‘தான்’ என்ற எண்ணம் தான் சூரன். மாமரத்தை வேல் பிளந்தது போல், ஞானத்தை நம்மை அறிந்தால் கடவுள் நிலையை அடையலாம். ‘கொக்கு’ என்றால் ‘மாமரம்’ என்றும் ஒரு பொருளுண்டு. சேவல் ‘கொக்கரக்கோ’ கூவும். இதை கொக்கு+அறு+கோ என்று பொருள்படும். ‘சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனே’ என்னும் பொருளில் சேவல் ஒவ்வொரு நாளும் முருகப் பெருமானை கூவியழைக்கிறது. நம்மையும் அவரை வழிபடச் சொல்கிறது.