நவகிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட திருவாரூர் தியாகராஜரை வணங்க வேண்டும். தியாக ராஜர் சன்னதியில் அர்த்த மண்டபத்தில் நவ கிரக விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.மற்ற இடங்களில் 15 நாளைக்கு ஒரு முறை பிரதோஷம். ஆனால் திருவாரூரில் மட்டும் நித்தமும் பிரதோஷம். இங்குள்ள நவகிரக சன்னதியில் நெல்லிக்காய் மாலை அணிந்த நெல்லிக்காய் பிள்ளையார் இருக்கிறார். அசுவமேத யாகம் செய்ய முடியாத வரும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய இயலாதவரும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் தீர்த்தமாட முடியாதவரும், காசி முதல் ராமேசுவரம் வரையுள்ள சிவதலங்களை வழிபட முடியாதவரும் ஒரே ஒரு வில்வமரத்தை வளர்ப்பதன் மூலம் மேற்கண்ட புண்ணியத்தை அடையலாம்.