பதிவு செய்த நாள்
08
மே
2019
02:05
திருப்பூர்:அட்சய திரிதியை நாளான நேற்று (மே., 7ல்), உலக நலன் வேண்டி, திருப்பூரில் மகாலட்சுமி யாகவேள்வி நடத்தப்பட்டது.கோவை, ஈரோடு, திருப்பூர், பவானி பகுதிகளில், ஸ்ரீஅம்ருதவர்ஷினி - வேத பாரம்பரியத்தை நோக்கி அமைப்பின் சார்பில், வேத பாரம்பரிய பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
அட்சய திரிதியை முன்னிட்டு, அமைப்பு சார்பில், சுமங்கலி பெண்கள் பங்கேற்ற, மகாலட்சுமி யாகம், திருப்பூரில் நேற்று (மே., 7ல்), நடந்தது.திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், காலை, 8:30 மணிக்கு, ஸ்ரீகணபதி வழிபாட்டுடன், மகாலட்சுமி யாகம் துவங்கியது. வேத பயிற்சியாளர் கீதா தலைமையிலான, 60 பெண்கள் அடங்கிய குழு, மதியம், 1:30 மணி வரை, யாகவேள்வி பூஜையை நடத்தினர்.மகா மந்திரங்களை, 36 முறை பாராயணம் செய்து, யாககுண்டம் அமைத்து, ஸ்ரீசூக்த மஹா யாகபூஜை நடந்தது. தொழில் விருத்தி, நவகிரக தோஷ பரிகாரம், செல்வ வளம், உலக மக்கள் நலன், ஆயுள், ஆரோக்யம் வேண்டி, பூஜைகள் நடத்தப்பட்டன. வேதமந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பகவத் கீதை மற்றும் ஆன்மிக விளக்கம் அளிக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.