பதிவு செய்த நாள்
09
மே
2019
02:05
வால்பாறை:வால்பாறை காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (மே., 8ல்) கோலாகலமாக நடந்தது.
வால்பாறை வாழைத்தோட்டம் அன்னை காமாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் (மே., 7ல்) மாலை, 5:00 மணிக்கு வேதபாராயணம், மூலமந்திரகாயத்திரி, அஸ்திர மந்திர ஹோமம் நடந்தது.
தொடர்ந்து மோகன வள்ளிக்கு மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.விழாவில் நேற்று (மே., 8ல்) காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு கலசநீரை பக்தர்கள் ஏந்தி கோவிலை வலம் வந்தனர்.காலை, 9:30 மணிக்கு விமானகோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.