பதிவு செய்த நாள்
09
மே
2019
03:05
வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே காளனம்பட்டியில் சந்தன கருப்பணசாமி, முத்தாலம்மன், காளியம்மன் கோயில்களில் திருவிழா நடந்தது. நேற்று 8 ல், மாலை கோயில் முன்பு நடப்பட்டிருந்த 45 அடி உயர வழுக்கு மரத்தின் மீது இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏறினர். கயிற்றின் வழியாக ஏறி தேங்காய், பழம் உள்ளிட்ட பண முடிப்பை எடுத்துவந்த இளைஞரை பாராட்டினர்.
* சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சமயபுரத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பிருந்தாவன தோப்பில் இருந்து அம்மன் அழைப்புடன் துவங்கிய விழாவில், மூலவர், பரிவார தெய்வங்களான் கருப்பணசாமி, பாண்டிசாமி, எல்லைகாத்த அம்மன், நாகாத்தம்மன், சப்த கன்னியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.பக்தர்கள் பால்குடம் எடுத்தல்,
அக்னிச்சட்டி எடுத்தல், கரும்புத்தொட்டில் குழந்தை ஊர்வலம் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.