விக்கிரவாண்டி திரவுபதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2019 03:05
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டியில் அட்சய திருதியை முன்னிட்டு திரவுபதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
பூஜையையொட்டி, அம்மனுக்கு பால் தயிர், இளநீர், பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 8:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. மாலை 6:30 மணிக்கு விளக்கு வைத்து குங்கும அர்ச்சனை பூஜை நடந்தது. தொடர்ந்து, விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.