திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில், சிவானந்தவல்லி சன்னதியில் திருவாதிரை, திருவாசக முற்றோதல் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், சிவனடியார் குழுவின் சார்பில், திருவாதிரை நட்சத்திர திருநாளான நேற்று (மே., 9ல்), சிவானந்தவல்லி சன்னதியில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.
காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:30 மணி வரை இடைவிடாது நடந்த முற்றோதலில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை முற்றோதல் குழு செயலர் சிவகுருநாதன், அம்பலவாணன் உள்ளிட்ட சிவனடியார்கள் செய்திருந்தனர்.