அன்னூரில் மழை வேண்டி பதிகம் பாடிய சிவாச்சாரியார்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2019 04:05
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. தமிழகத்தில் மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக, பிரசித்தி பெற்ற கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியது. அதன்படி பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், நேற்று (மே., 9ல்) மழை வேண்டி, சிறப்பு யாகம் நடந்தது. கேராகத்தில், குறிஞ்சி பண்ணில், ஏழு திருமுறையை சேர்ந்த திருமுறை பாடல்கள் சிவாச்சாரியார்களால் பாடப்பட்டன.நந்திதேவரை சுற்றி தொட்டி கட்டப்பட்டு, அதில் நீர் ஊற்றி குளிர்வித்தனர். புலனைந்தும் என துவங்கும் மழை வேட்டல் திருப்பதிகங்களை, குருமூர்த்தி சிவம், விவேக் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பாடி, மழை வேண்டி யாகம் நடத்தினர்.பின்னர் மன்னீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.