ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான பத்திரகாளியம்மன் கோயிலில், சித்திரை திருவிழா கொண்டாடினர். இக்கோயிலில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் நேற்று பால், புனித நீர் கலசத்துடன் கோயில் ரதவீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். மேலும் பல பக்தர்கள் வேல் காவடி, தேர் காவடிஇழுத்து கோயில் ரதவீதியில் ஊர்வலமாக வந்து பத்திரகாளியம்மன் கோயிலில் நேர்த்தி கடன் செலுத்தினர். பின் பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.