பதிவு செய்த நாள்
11
மே
2019
11:05
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விழா மே 9 அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
முதல் நாளான நேற்று காலை 10:20 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக அம்மனுக்கு கருப்பு வெள்ளாடு பலியிட்டு வழிபட்டனர். சர்வ அலங்காரத்தில் உற்ஸவராக காட்சி அளித்த அம்மன், பிரகாரத்தை வலம் வந்தார். அதை தொடர்ந்து பிற்பகல் 4:00 மணிக்கு சங்காபிேஷகம், கலசாபிேஷக பூஜைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து இரவு 7:35 மணிக்கு வெள்ளி கேடயத்தில் அம்மன் புறப்பாடும் நடந்தது. வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் காலையில் வெள்ளி கேடயம், பல்லக்கு, இரவில் சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.18ல் தேரோட்டம்மே 16 அன்று மாலை கோயில் உட்பிரகாரத்தில் தங்க ரத புறப்பாடும், மே 17 அன்று காலை 7:00 மணிக்கு களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட்டுதல், அன்று இரவு அம்மன் வெள்ளி குதிரையில் புறப்பாடு நடைபெறும். மே 18 அன்று காலை 10:35 மணிக்கு தேரோட்டமும், இரவு புஷ்ப பல்லக்கும் நடைபெறும். 11 வது நாளான மே 20 அன்று உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறும்.
கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கவுரவ கண்காணிப்பாளர் நாராயணன் செட்டியார், கண்காணிப்பாளர் கணபதிராமன் ஏற்பாடுகளை செய்தனர்.தேவகோட்டைஎழுவங்கோட்டை விஸ்வநாதர் அகிலாண்டேஸ்வரி அம்பாள்கோவிலில் வைகாசி விழா கொடியேற்றதுடன் துவங்கியது. மாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி அம்பாள் சிறப்பு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஐந்தாம் நாளான மே 13ந்தேதி விஸ்வநாதர் , அகிலாண்டேஸ்வரியின்திருக்கல்யாண .உற்ஸவம் நடக்கிறது. மே17 ல் தேரோட்டம் நடக்கிறது.