திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2019 11:05
காரைக்குடி:காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் தென் திருப்பதியான அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா 14 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மே 8ம் தேதி காலை 6.:45 மணிக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. நேற்று கொடி யேற்றமும் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும் தீபஆராதனைகளும் நடந்தன. ஸ்ரீநிவாசபெருமாள் உபய நாச்சிமார்களுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 14 நாட்கள் நடைபெறும் வைகாசி திருவிழாவில் 9ம் நாளான மே 18ம் தேதி காலை அலங்கரிக்கப் பட்ட திருத்தேரில் பெருமாள் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளி மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டமும், மே 21ம் தேதி தெப்பதிருவிழாவும் நடைபெற இருக்கிறது. கொடியேற்ற விழாவில் கோயில் அறங்காவலர் தலைவர் ராமநாதன் செட்டியார், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி உட்பட மண்டகப்படி உபயதார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.