கிணத்துக்கடவு: சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையை ஒட்டி, காலை 7:30 மணிக்கு மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உட்பட, 30 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.இதனை தொடர்ந்து, மாரியம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாரியம்மனை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.