பதிவு செய்த நாள்
11
மே
2019
12:05
பல்லடம்: பல்லடம் அருகே, வடுகநாத சுவாமி கோவில், பத்தாம் ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது.
கணபதிபாளையம் ஊராட்சி மலை யம்பாளையத்தில், வடுகநாத சுவாமி கோவில் உள்ளது. அங்கு, காலபைரவர் மூலவராக அருள்பாலித்து வருகிறார். கோவிலின், பத்தாம் ஆண்டு விழா, இரண்டு நாட்கள் நடந்தது. விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்கியது. திருக்குடங்கள் நிறுவப்பட்டு, திருவிளக்கு வழிபாடு, வேள்வி வழிபாடு, நூறாயிரம் பரவுதல், பேரொளி வழிபாடு நடந்தன. ‘சங்கு தீர்த்தத்தின் மகிமை’னும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் அனந்தகிருஷ்ணன் பேசினார். பழநி ஆதீனம் சாது சண் முகஅடிகளார் ஆண்டு விழாவை நடத்தி கொடுத்து அருளாசி வழங்கினார். சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி ப க்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற அனைவருக்கும், கோவிலில் கமிட்டியின் சார்பில் அன்னதானம்வழங்கப்பட்டது.