வருஷநாடு: தர்மராஜபுரம் - தங்கம்மாள்புரம் மெயின் ரோட்டில் வைகை ஆற்றுபடுகையில் அமைந்துள்ளது. நாகம்மன் கோயில்.இக்கோயிலில் வெள்ளிக்கிழமைகள், திருகார்த்திகை, சித்திரை, மார்கழி மாத பூஜைகள் என ஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும். அம்மனுக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.
கோடைகாலங்களில் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத போது அம்மனை வழிபட்டால் நீர் வரத்து ஏற்படும். குழந்தை பாக்யமும், வாழ்க்கையில் மன நிம்மதி, தொழில் அபிவிருத்தியாகி நினைத்தது நடப்பதாக பலர் உணர்வுப்பூர்வமாக கூறுகின்றனர். எதிலும் வெற்றி கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.கோயிலில் அன்னதானம், பொங்கல் வைத்து பலர் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.