பதிவு செய்த நாள்
13
மே
2019
01:05
திருப்பூர்:அத்வைதம் என்ற தலைப்பிலான ஆன்மிக சொற்பொழிவில் உருவ வழிபாட்டின் நிலை குறித்து விளக்கப்பட்டது. ஸ்ரீ சங்கர பகவத் பாதாளின் ஜெயந்தியை முன்னிட்டு, ஓடக்காடு ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மடத்தில், பரசுராமனின், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது
.அத்வைதம் என்ற தலைப்பில், அவர் பேசியதாவது: கடந்த, 2,400 ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஆதிசங்கரர், இந்து மதத்து எதிராக, 72 மதங்களின் உருவ வழி பாழிபாட்டை இழிந்து பேசினார். அப்போது, சிவபெருமான், ஆதிசங்கரராக அவரித்து, இந்து மதத்தை பாதுகாத்தார்.அந்த கோட்பாடே அத்வைதம். ஆகையால், குழந்தைகளுக்கு உருவ வழிபாட்டை போதிக்க
வேண்டும். அதேபோல், கானாபத்தியம், சன்மடம், சாட்டம், சைவம், சவுரம், வைஷ்ணவம் ஆகிய மதங்களை ஒன்றிணைத்து இந்து மதம் என்ற பெயரில், ஒரே வழிபாட்டினை கொண்டு
வந்தவரும் அவரே ஆவார். இவ்வாறு, பரசுராமன் பேசினார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீ காஞ்சிகாமகோடி பக்தசமாஜம் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.