பதிவு செய்த நாள்
13
மே
2019
02:05
கிணத்துக்கடவு:சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நாளை 12ம் தேதி துவங்குகிறது.சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, நாளை 12ம் தேதி காலை, 9:30 மணிக்கு முகூர்த்த தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.வரும், 14ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டு விழாவும், 20ம் தேதி இரவு கிராமசாந்தி, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது.வரும், 21ம் தேதி இரவு கம்பம் நடுவிழா, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி, 22ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது.
அன்று இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.வரும், 24 முதல் 28 வரை, காலை மற்றும் இரவு நேரங்களில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.வரும், 29ம் தேதி காலை 6:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், இரவு 7:00 மணிக்கு மாரியம்மன்னுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் தேருக்கு புறப்படுதல், மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.
ஜூன், 2ம் தேதி மதியம், 12.00 மணிக்கு மாரியம்மன்னுக்கு மகா அபிஷேக வழிபாடு நடக்கிறது.ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் ஆனந்த் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.