பதிவு செய்த நாள்
13
மே
2019
02:05
பெ.நா.பாளையம்: கோவை தடாகம் ரோடு, இடையர்பாளையத் தில் சீதா கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆஸ்திக சமாஜம் சார்பில், 15வது ஆண்டு சீதா கல்யாண உற்சவம் கடந்த, 8ம் தேதி முதல், 12 வரை இடையர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள, திருமண மண்டபத்தில் நடந்தது. ஐந்து நாள் விழா மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள், இன்னிசை, நாம சங்கீர்த்தனம், விஷ்ணு சகஸ்ரநாமம், தியாகராஜ கீர்த்தனங்கள், பூஜை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று (மே., 12ல்) காலை வேதபாராயணம், சீதா கல்யாண உற்சவமும், மாலையில் வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உற்சவம் ஆகியன நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.