மங்கலம்பேட்டை: பிஞ்சனூர் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த பிஞ்சனூர் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை, தினசரி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் (12ம் தேதி) தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணியளவில் அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணியளவில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.