கடலூர்: கடலூர் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற் சவத்தில் நேற்று (மே., 13ல்) கருட சேவை நடந்தது.
கடலூர் அடுத்த சிங்கிரிகுடி கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற் சவம் கடந்த 8ம் தேதி முதல் நடந்து வருகிறது.வரும் 20ம் தேதி வரை நடக்கும் உற்சவத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பெருமாள் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று (மே., 13ல்) இரவு நடந்த கருடசேவையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (மே., 14ல்) காலை 6 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது. 16ம் தேதி இரவு சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. வரும் 17ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி நாகராஜன், ஜெயக்குமார் பட்டர் மற்றும் கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.