பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
காஞ்சிபுரம் : வரதர் கோவில் தேர், நேற்று, சுத்தப்படுத்தப் பட்டது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், 17ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதற்காக, பல முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.ஏழாம் நாள் உற்சவமான, 23ல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக தேரை சுத்தப்படுத்தும் பணி துவங்கிஉள்ளது. இதற்காக, மூடப்பட்டிருந்த இரும்புத் தகடுகள் நேற்று (மே., 13ல்) அகற்றப்பட்டு, தீயணைப்பு வாகனம் மூலம், வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து, தேரை சுத்தப்படுத்தினர்.தொடர்ந்து, தேர் அலங்காரம் உள்ளிட்ட பணிகள், விரைவில் துவங்க உள்ளன.