அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே மாயபுரத்தில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.அழகர்மலை நூபுரகங்கை உட்பட பல்வேறு புனித தீர்த்த குடங்களை வைத்து வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கி நடந்தன. நேற்று (மே., 16ல்) புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுரகலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.