திண்டிவனம்: திண்டிவனத்தில் மழை வேண்டிய முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் ஈத்கா பள்ளி வாசல் உள்ளது. இங்கு ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின்போது திண்டிவனம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று கூடி கூட்டு தொழுகையில் ஈடுபடுகின்றனர். சிறிய இடத்தில் இருப்பதால் செஞ்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததது. இதனையடுத்து விசாலமான இடத்தில் ஈத்காவை கட்ட பள்ளி வாசல் கூட்டுக் குழுவினர் முடிவு செய்தனர்.அதன்படி, திண்டிவனம்-மயிலம் ரோட்டில் வக்பு வாரிய வளாகத்தில் உள்ள மஸ்ஜிதே குபா வக்பு போர்டு பள்ளி வாசலில் அருகே புதிய ஈத்காவை கட்டினர். இதன் திறப்பு விழா நடந்தது.இதனையொட்டி திண்டிவனத்தில் மழை வேண்டிய சிறப்பு தொழுகை நடந்தது.
ஆயிரக்கண்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மழைக்காக இறைவனை வேண்டினர். தொடர்ந்து சிறப்பு பயான் (சொற்பொழிவு) நடந்தது. இஸ்லாமிய நெறி மார்க்கம் குறித்து விளக்கப்பட்டது. 18 பள்ளி வாசல்கள் நிர்வாகிகள், உலமாக்கள் கலந்து கொண்டனர்.