பதிவு செய்த நாள்
21
மே
2019
02:05
தலைவாசல்: தலைவாசல் அருகே, அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. தலை வாசல், வீரகனூர் தெற்கு மேட்டில், பொன்னாளி அம்மன் கோவில் உள்ளது. வைகாசி மாதத்தை முன்னிட்டு, திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 17ல், பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கி சக்தி அழைப்பு, சந்தன காப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்று (மே., 20ல்) பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மன் அருள் பெற்றனர்.