பதிவு செய்த நாள்
21
மே
2019
02:05
ஊத்துக்கோட்டை: அங்காளம்மன் கோவிலில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, தீ மிதித்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, சிட்ரபாக்கம் கிராமத்தில் உள்ளது அங்காளம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில், இரண்டாம் ஆண்டு தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் (மே., 19ல்) இரவு நடந்தது.
இதையெட்டி, 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர்.
விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் (மே., 19ல்) இரவு, 7:00 மணிக்கு, தீ மிதி திருவிழா நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, தீ மிதித்தனர்.இதைத் தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று (மே., 20ல்) இரவு, 7:00 மணிக்கு, அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.