புதுச்சேரி:மணவெளியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் 6ம் ஆண்டு மகா உற்சவம் இன்று (மே., 23ல்) நடக்கிறது.
வில்லியனூர், மணவெளியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் 6ம் ஆண்டு மகா உற்சவம் இன்று 23ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வலம்புரி விநாயகருக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனை, சந்தனகாப்பு, அபிஷேகம் அலங்காரம் நிகழ்ச்சியும், பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு விநாயகருக்கு மின் அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை மணவெளி கிராம மக்கள் செய்துள்ளனர்.