பதிவு செய்த நாள்
23
மே
2019
02:05
ஓசூர்: ராயக்கோட்டையில், மகாபாரத கோவில் திருவிழாவை முன்னிட்டு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் இருந்து சூளகிரி செல்லும் சாலையில், மகாபாரத கோவில் உள்ளது.
ராயக்கோட்டையை சுற்றியுள்ள, 18 கிராம மக்கள் சார்பில், இக்கோவில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 4ல், கோவில் திருவிழா துவங்கியது. தினமும் பகலில் மகாபாரத ஆன்மிக சொற்பொழிவு, இரவில் மகாபாரத நாடகம் நடந்தது.
கடந்த, 13ல் தேர்த்திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று (மே., 22ல்) காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பாஞ்சாலி சபதத்தை முடிக்கும் வகையில், துரியோதனை படுகளம் செய்து, அதன் ரத்தத்தில் கூந்தலை அள்ளி முடிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, துரியோதனன் இறுதி சடங்கு நிகழ்ச்சியும் நடந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பிக்கலிகொல்லப்பட்டியை சேர்ந்த கோகுல கண்ணன் நாடக சபா குழுவினர், மகாபாரத நாடகத்தை நடத்தி காட்டினர். ராயக்கோட்டை சுற்று வட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.