பதிவு செய்த நாள்
23
மே
2019
03:05
உடுமலை : மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். .மடத்துக்குளம் அருகே
கிருஷ்ணாபுரத்தில், காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், திருவிழாவுக்காக கடந்த 14ம்தேதி நோன்பு சாட்டப்பட்டது. தொடர்ந்து, 17 ம்தேதி, காலையில் கொடி கம்பம் நடப்பட்டது.நேற்றுமுன்தினம், காலை, 8:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. மதியம், தீர்த்தம் எடுத்து வந்தனர்.
மாலையில் காமாட்சி அம்மனுக்கு, தீர்த்த அபிஷேகம் நடந்தது. இரவில், சக்தி கும்பம் அலங்கரித்து, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன், காமாட்சி அம்மன் அழைப்பு நடந்தது.நேற்று,
(மே., 21ல்)காலையில், அம்மனுக்கு மாவிளக்கு மற்றும் திருக்கல்யாண சீர்வரிசைப் பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்தனர். பின்னர், 16 வகையான, திரவியங்களில் மகா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலையில் பக்தர்கள், பூவோடு எடுத்து வழிபட்டனர்.
வழிபாட்டை தொடர்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இரவில், நடனம், நாட்டியம் மற்றும் இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (மே., 22ல்), காலை, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மாலையில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபடுகின்றனர்.