நெட்டப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2019 02:05
நெட்டப்பாக்கம் : மடுகரை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று (மே., 24ல்) நடந்தது.மடுகரை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை பிடாரியம்மனுக்கு சாகை வார்க்கப் பட்டது. கடந்த 21ம் தேதி திரவுபதி அம்மன்-அர்ஜூணன் திருக்கல்யாணமும், 22ம் தேதி கூத்தாண்டவர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று (மே., 24ல்) தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.